பரீட்சைக்கு முன் கருத்தரங்குக்கு தடை

EXAMபொது பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரும் அந்த பரீட்சைகள் நிறைவடையும் வரையிலும் கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சினாலேயே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதுள்ளதுடன் புதிய கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்விப்பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்த சட்டத்தை மீறுகின்ற நிறுவனங்கள் இன்றேல் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.