‘பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் வெளிநாட்டு படைகள் வருவதை தவிர்க்க முடியாது’

karunaradnaஅரசாங்கம் உலக நாடுகளுக்கு தெரிவித்ததைதப் போன்று கற்றுக் கொண்டபாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் செய்யவேண்டும். இல்லையென்றால் வெளிநாட்டு படைகள் இங்கு வருவது தவிர்க்கமுடியாது.’ என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டுள்ள எதிர்கட்சிகளின் கூட்டமைப்பானது சனிக்கிழமை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை ஏற்படுத்தியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இலங்கையில் அந்நிய சக்திகளின் தலையீட்டை அரசாங்கமே ஏற்படுத்துகின்றது. அரசைப் பொறுத்த வரையில் யுத்தம் செய்யும் மனநிலையிலேயே காணப்படுகின்றது.

இன பிரச்சனை இருந்தபடியால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவும் போராடவும் வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட்டது. இதனை தவிர்க்கும் முகமாக நாம் உடன் படிக்கைசெய்து ஒரு தீர்வை எட்ட முயன்றோம். ஆனால் அதனை செய்யவிடாது மஹிந்த குழப்பியடித்துவிட்டார்.

சுனாமிப் பிரச்சனையைக்காட்டி குழப்பிவிட்டார். பின்னரும் நாம் புதிய யோசனையை அரசின்முன்வைத்து தமிழ் மக்களிடைய இனப் பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்தோம். அதனையும் கூட செய்யாது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் நிலமையே காணப்படுகின்றது.

இதன் மூலம் எமது நாட்டில் பிரச்சனைகளை தீர்வு செய்வதற்கான வழிவகைகளே இல்லாது செய்துள்ளார்கள். கடந்த காலத்தில் இருந்த பிரதம நீதியரசரும் கூட இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்’ என்று குறிப்பிட்டார்.

இதில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோகனேசன், ஊடக செயலாளர் எஸ்.பாஸ்கரா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்;.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.சுமந்திரன், தமிழ் முஸ்லிம் கூட்டின் தலைவர் அஸாத்அலி ஆகியயோர் கலந்துகொண்டார்கள்.

Recommended For You

About the Author: Editor