பயிற்ச்சியின் போது வெடிப்புச் சம்பவம்! கடற்படைவீரர் அறுவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

SL Navy logoயாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கடற்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற இவ் வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலணை கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்களே காயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மண்கும்பான் என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்.பீ.ஜி. குண்டு பயிற்சியின் போது அக்குண்டு முன்னோக்கி செல்லாது பின்நோக்கி பாய்ந்தமையின் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபக்படுகிறது.

Recommended For You

About the Author: Editor