பயந்து ஓடியதால் சிக்கிக்கொண்ட திருடன்

arrest_1நீர் இறைக்கும் மோட்டாரை திருடியவர், வீதியில் நின்றவர்களைப் பார்த்து பயந்து ஓடியதினால் பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மோட்டாரைச் சுமந்தபடி வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியால் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவரில் சந்தேகம் கொண்ட அவ்வூர் இளைஞர்கள், எங்கே மோட்டார் கொண்டு செல்கின்றீர்கள், விற்கவா என்று கேட்டனர். உடனே மோட்டரைக் கொண்டு வந்தவர் மோட்டரை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

துரத்திச் சென்ற இளைஞர்கள் அவரைப் பிடித்து விசாரித்த போது, கொக்குவில் சொர்ணவடலி பிள்ளையார் கோவிலடியிலுள்ள ஒரு வீட்டில் இதனைத் திருடியதை தான் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் மோட்டாருடன் திருடனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Recommended For You

About the Author: Editor