பன்றி வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி

பன்றி வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் வரணி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில், இடைக்குறிச்சி வரணி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையரான கந்தசாமி கந்தராசா (காந்தன்) (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் பன்றி வெடியை வைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து இவ்வெடி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நபருடன் பயணித்தவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தலைமறைவாகிய நபரையும் தேடி வருவதாகவும் கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.