யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு தாய்லாந்தில் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தாய்லாந்தில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சிகளில் யாழ்ப்பாணத்து பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பனை சார் உற்பத்திப் பொருள்யின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தக் கூடியதான வழிமுறைகளை துறை சார்ந்த தகுதியுடைய போதனாசிரியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
தற்போதைய நவீன மயப்படுத்தலுக்கு ஏற்ப பனை சார் உற்பத்திப் பொருள்களை தயார்படுத்தி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கென தெரிவு செய்யப்பட்ட பனை சார் போதனாசிரியர்கள் தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்று புதிய தொழில்நுட்ப முறைமைகளை கற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கமைவாக உரிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பனை சார் உற்பத்திப் பொருள்களை தரம் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக சிறுதொழில் முயற்சியாளர்கள் நன்மையடையவுள்ளனர் என்றார்.
பனை சார் உற்பத்திப் பொருள்யின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தக் கூடியதான வழிமுறைகளை துறை சார்ந்த தகுதியுடைய போதனாசிரியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.