பனை ஆராய்ச்சி நிலையத்தை புனரமைப்பின் பின்னர் திறப்பு

வடக்கில் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தப் பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பனை அபிவிருத்திச் சபை மேற்கொண்டது.கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்டு வரும் பனை ஆராய்ச்சி நிலையத்தை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் திறந்து வைக்கவுள்ளார்.இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையம் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

பனை ஆராய்ச்சி நிலையத்தின் கட்டட நிர்மாண வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. ஆளணி வளத்தைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பனை ஆராய்ச்சி நிலையம் இயங்க ஆரம்பித்ததும் பனை வளம் துறைசார் ஆராய்ச்சிகளையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் எனப் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

வடக்கில் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தப் பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பனை அபிவிருத்திச் சபை மேற்கொண்டது. இதற்கென இந்திய அரசு வழங்கிய நிதியுதவியின் மூலம் இந்தக் கட்டடம் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான இயந்திரங்கள் மற்றும் ஏனைய வசதிகளும் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளன. அத்துடன் இதற்கான ஆளணி வளமும் ஏற்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே உத்தியோகத்தர்கள் சிலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாடு முழுமையாக ஆரம்பித்துவிடும் எனப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: webadmin