பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் 38 பேருக்கு நிரந்தர நியமனம்

palma-kaithady-appointmentபனை அபிவிருத்தி சபையின் கீழ் வட மாகாணத்தில் கடமையாற்றும் 38 உத்தியோகத்தர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

யாழ். கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இந்த நியமன கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. .என். டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனங்கள் வழங்கப்பட்டன