பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை யாழ்ப்பாணத்தில் திறப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் புடைசூழ இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை அலுவலகம் ஒன்று நேற்றய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகில் வீரகேசரி அலுவலகத்திலேயே இக்கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், ஆசிரியர்கள், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

press_complaint