பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வட பகுதி சட்டத்தரணிகள் தீர்மானம்

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தமது எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் வட பகுதி சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

நாளை செவ்வாய்க் கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரையான நான்கு நாட்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் இப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்