யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் வாள் வெட்டுக்கு இலக்கானதை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று காலை முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிபுறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.