பட்டாசுகள் வெடித்ததில் இரு இளைஞர்கள் காயம்

கையில் வைத்திருந்த பட்டாசுப் பெட்டிக்குள் தீப்பொறி விழுந்து தீப்பற்றிக் கொண்டதால் அதற்குள் இருந்த பட்டாசுகள் படபடவென வெடித்துச் சிதறின. இதனால் இரண்டு இளைஞர்கள் கைகளிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மந்துவில் கிழக்கில் இடம்பெற்றது. குரங்குகளை கலைப்பதற்காக ஒரு கையில் பட்டாசுப் பெட்டியை வைத்துக் கொண்டு மறுகையினால் பட்டாசுகளை வெடிக்கச் செய்த வேளையிலேயே தீப்பொறி பட்டாசுப் பெட்டிக்குள் வீழ்ந்து தீப்பற்றியதில் இந்த விபரீதம் ஏற்பட்டது.

கை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்குள்ளான நடராஜா நிலுக்ஷன் (வயது20) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்றைய இளைஞரான இரத்தினம் தயாபரன் (வயது 24) என்பவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.