படையினரால் மாணவர் ஊக்குவிப்பு புலமைப்பரிசில்

army-donateயாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற் எற்பாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்றன குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான “மாணவர் ஊக்குவிப்பு” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு மாணவர்களிற்கான புலமைப்பரிசில்களை வழங்கினார்.

இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 245 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 5,000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படையினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 3 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

511ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அச்செழுப் பகுதியில் 2 வீடுகளும் 513ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டிப் பகுதியில் ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளன.