பசுமை அமைதி விருது 2012; 319 மாணவர்கள் தெரிவு

இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த 319 மாணவர்களுக்கு பசுமை அமைதி விருது வழங்கப்பட்டது.

இதன்போது இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் வெளியிடப்பட்டு வரும் நங்கூரம் சஞ்சிகையின் வெளியீடும் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு விவசாயபீடம் யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிகுந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கல்வியலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: webadmin