பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்து மாணவனுக்கு தங்கப்பதக்கம்

கொழும்பில் அண்மையில் இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வடமாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.யாழ். இந்துக் கல்லூரி மாணவரான செங்கதிர்ச்செல்வன் சேந்தன் என்ற மாணவனே வட மாகாண ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவருக்கான தங்கப்பதக்கத்தை பேராசிரியர் எஸ்.ஏ.நோபேற் வழங்கிக் கௌரவித்தார்.

இப்போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி சார்பாக பங்குபற்றிய மாணவர்களில் 20 மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதில் 13 மாணவர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர். More Info

Recommended For You

About the Author: webadmin