வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் வானைப் பிளந்தது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் வெள்ளாமாக காட்சியளித்தனர். அத்துடன் இலங்கை விமானப் படையினர் நல்லூர் கந்தனுக்கு மலர் சொரிந்து வானை வட்டமிட்ட காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவத்தில் நேற்று இருபத்தி மூன்றாவது நாள் சப்பரத் திருவிழா இடம்பெற்றதுடன், இன்று தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
 
					





 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							