நோபல் பரிசுப் பணத்தை இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்க கொலம்பிய ஜனாதிபதி தீர்மானம்

நோபல் பரிசுக்காக கிடைத்த பணத்தை கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மனுவெல் சென்ரொஸ் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கவுள்ளார்.

இடம்பெயர்ந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நலனுக்காக நோபல் விருதுக்காக கிடைத்த பணத்தை அன்பளிப்பு செய்வதாக ஜனாதிபதி சன்ரொஸ் தெரிவித்துள்ளார்

52 வருடங்களாக பார்க் கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர தலைமைத்துவம் வகித்ததன் காரணமாக இவருக்கு அண்மையில் நோபல் சமாதான விருது வழங்கப்பட்டது.

தற்போது பார்க் கிளர்ச்சியாளர்கள் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ளனர்.

52 வருட கால யுத்தம் காரணமாக கொலம்பியாவில் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor