நேற்றுடன் முடிவுக்கு வந்தது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

tnaவடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் கட்சிளின் ஆசனப் பங்கீடுகள் திருப்திகரமாகப் பங்கிடப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்,

யாழ். மாவட்டம்

தமிழரசு கட்சி – 7 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 4 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
புளொட் – 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம்

தமிழரசு கட்சி – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 1 ஆசனம்
டெலோ – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலே – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

வவுனியா மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலோ – 2 ஆசனங்கள்
புளொட்- 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

மன்னார் மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்

இந்த அடிப்படையில் ஐந்து மாவட்டங்களுக்கும் ஆசனப் பங்கீடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.