நெல்லியடி பொதுச் சந்தை திறப்பு

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 51.963 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நெல்லியடி பொதுச் சந்தையின் மரக்கறி விற்பனைப் பகுதி செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

article_1422953722-DSC0020

கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா சந்தையை திறந்து வைத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி இந்த சந்தைக் கட்டிடத் தொகுதியின் கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2014ஆம் அண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி கட்டிடப் பணிகள் முடிவடைந்தன.

ஏற்கனவே, மீன்சந்தை இந்த பகுதியில் அமைந்திருந்த போதும், ஒழுங்கான மரக்கறிச் சந்தையொன்று இல்லாமல் இருந்த குறை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts