நெல்லியடியில் விபத்து : மூவர் காயம்

நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பிக்கப் வாகன விபத்தில் தாயும் இரு மகன்களும் காயமடைந்துள்ளனர்.

நெல்லியடியில் இருந்து இன்று பிற்பகல் 2.50 மணியளவில் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனத்தை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் இரு மகன்களும் காயமடைந்துள்ளனர்.