நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை?

நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

EPDP-daniyal-rex

இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னலையில் நடத்தப்பட்டது.

இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிடறி பகுதியில் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு