நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

jail-arrest-crimeகஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 102 கிலோ கஞ்சாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 இந்திய மீனவர்களும் 2 நெடுந்தீவு மீனவர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த 6 சந்தேக நபர்களும் நெடுந்தீவு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளன. மேலும் கஞ்சாவை இராசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிபதி ஆர்.எஸ்.எம்.மகேந்திராஜா உத்தரவிட்டுள்ளதாகவும் நெடுந்தீவு பொலிஸார் கூறினர்.