நெடுந்தீவு கடற்பகுதியில் பாதுகாப்பு கடமையிலிருந்த இலங்கைக் கடற்படையின் சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு மாவிலித்துறைமுக ஆத்துவாய்க்கும் குடவலி முனைக்கும் இடையில் நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது கடும் காற்று வீசுகின்ற நிலையில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. இந்நிலையில் காணாமல் போன வீரரை தேடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை சிப்பாய் விழுந்த பகுதி நீரோட்டம் நிறைந்த பகுதியாகும்.
2004 ஆம் ஆண்டும் இப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் விழுந்து காணாமல் போயிருந்தார்.
இதேவேளை தொடர்ச்சியாக தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.