நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி முருகற் கற்களைக் கொண்டு சுற்றுமதில் அமைந்துள்ளனர். தீவுப்பகுதிக்கு யாழில் இருந்து கட்டிடப்பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் கடற்கரையில் உள்ள முருகற் கற்களைக் கொண்டு இந்த சுற்றுமதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
47.1 சதுர கிலோ மீற்றர் கொண்ட நெடுந்தீவு பிரதேசத்தில் நூற்றுக்கு 80 வீதமான பகுதிகளில் இந்த முருகற்கல் மதில்கள் காணப்படுகின்றன. கடலில் எடுக்கப்பட்ட முருகற் கற்களைக் கொண்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி இந்த மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.