நெடுந்தீவில் புதிய பிரதேச செயலகம், மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

DEL2

நெடுந்தீவிற்கு நேற்றய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைத்தார்.

பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் சேவைக்காக கையளித்தார்.

78 மில்லியன் ரூபா செலவில கெயார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நவீனவசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத் தொகுதியில் பல்வேறுபட்ட நிர்வாக அலகுகள் உள்ளடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் நெடுந்தீவு மக்கள் தமக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன்மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப பாடநெறிகளை யாழ்ப்பாண நகரத்திற்கு வராமல் நெடுந்தீவிலேயே கற்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.