நூற்றாண்டு விழாவையொட்டி நடைபவணி

Chundikuli Girls' Collegeசுண்டுக்குழி மகளீர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு ஏற்பாடாக பாடசாலை பழைய மாணவிகளின் நடைபவணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நேற்றய தினம் காலை 10.00 மணிக்கு சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் ஆரம்பமான இந்த நடைபணி பழைய பூங்கா வீதியூடாக சென்று கேரியில் வீதி மற்றும் பிரதான வீதியூடாக பாடசாலையைச் சென்றடைந்துள்ளது.

சுண்டுக்குழி மகளீர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நூற்று ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக நூற்றாண்டு விழாவை நிறைவு செய்யும் முகமாக இந்த நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்போது கல்வி கற்றுவரும் மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பழைய மாணவிகள் கலந்துகொண்டனர்.