நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துவிட்டதால் நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை நாடுமுழுவதுவம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துவிட்டது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார்.
இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் தேசிய மின் வழங்கலுக்கு அதிக அளவு மின்சாரம் வழங்குகிறது.
நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 500 தொடக்கம் 2 ஆயிரத்து 600 மெகாவாட் மின் தேவையுள்ள நிலையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தால் 810 மெகாவாட் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே நாட்டில் மின் தேவையை சமநிலைப்படுத்துவதற்கு சில பிரதேசங்களுக்கு சுழற்சிமுறை மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்படலாம் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.