நீர்வேலி விபத்தில் ‪வயோதிபர்‬ உயிரிழப்பு

நீர்வேலிச்‬ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ‪‎வாகன‬ விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமானார். இச்சம்பவம் நேற்று ( புதன்கிழமை) ‪இரவு‬ 8 மணிக்கு இடம்பெற்றது

இதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த ‪கந்தையா‬ வேலாயுதப்பிள்ளை( வயது-78) என்பவரே மரணமானவர் ஆவர்

இவர் நீர்வேலி சந்திப்பகுதியில் பொருட்களை வாங்குவதற்காக வந்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட சமயம் யாழ்ப்பாணம் நோக்கி வந்த வாகனம் அவரை மோதியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய முதியவர் படுகாயமடைந்த நிலையில்யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து வாகன சாரதி கைது செய்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor