நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலே எமது எதிர்பார்ப்பு; – அவுஸ்ரேலியத் தூதுவர்

australia-ayarவடமாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்தரமானதுமான முறையில் அமைய வேண்டும் என்றே தாம் எதிர்பார்ப்பதாக யாழ்.ஆயரிடம் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் மூடி உள்ளிட்ட அவரது குழுவினர் நேற்று மாலை யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களைச் சந்தித்து எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை ஆயர் தெரிவிக்கையில் எதிர்வரும் தேர்தலானது ஜனநாய அடிப்படையில் தமக்கு உரிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்வதற்கான சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலே நடைபெறும் என அவரிடம் எடுக்கூறினார்

மேலும் நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் பல்வேறு தரப்புக்களைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.