Ad Widget

நிலங்களை மீள வழங்கக் கோரி தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம்

கிளிநொச்சி – பரவி பாஞ்சான் பகுதியிலுள்ள இராணுவ முகாம் எல்லைக்குள் இருக்கும் தமது இடங்களை வழங்குமாறு கோரி, அப் பகுதி மக்கள் இன்று தொடர்ந்தும் நான்காவது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 13ம் திகதி முகாமுக்கு முன்னாள் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்தனர்.

இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் தமது நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், குறித்த முகாமை அகற்றி தமது நிலங்களை பெற்றுக் கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அம் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts