அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி எதிரவரும் 21ம் திகதி அங்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறுதினம் நேரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.