நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்

vicknewaran-tnaவடமாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று காலை 10 மணிக்கு வழங்கி வைத்தார்.

ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பில் நியமனக்கடிதத்தை இன்று வழங்குவது என முடிவாகியது.அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது,

நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ,

இன்று எனது பதவிக்கான நியமனக்கடிதம் உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுனரினால்
வழங்கப்பட்டுள்ளது. அடுத்து பதவிக்கான சத்திய பிரமாணம் செய்ய வேண்டும். எனினும் சத்திய பிரமாணம் யார் முன்னிலையில் செய்ய வேண்டும் என்றும் தெரியாது ஆகவே சற்று காத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.