வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் மேற்படி கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க மாட்டோம் என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் எதிர்த்து நின்றனர்.
எனினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்தமையால் அவர்களது எதிர்ப்பு தோல்வியில் முடிவடைந்தது.