வலிகாமம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வட மாகாண நிபுணர் குழுவில் நீர் மாசு குறித்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை என களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி குமரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆவண இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்த கருத்து தெரிவிக்கையில் – நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வினை, வெளிநாட்டில் உள்ள முன் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு மேற்கொள்வதன் ஊடாகவே முழுமைப்படுத்த முடியும்.
தற்போது வட மாகாண சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒன்பது பேரில் யாருக்கும் நீரியல் நிபுணத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே இந்தக் குழு குறித்து மறு பரிசீலனை செய்வதுடன், இவர்களுடன் முன் அனுபவம் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களையும் இணைப்பதன் மூலம் நம்பகமான ஆய்வை செய்யமுடியும். அத்துடன் இங்குள்ளவர்களுக்கும் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும்.- என்றார்.