நாவற்குழி விகாரையில் வெடிக்காத கைக்குண்டு மீட்பு

Hand-bombநாவற்குழியில் நேற்று முன்தினம் இரவு கைக்குண்டு வெடித்த இடத்திலிருந்து நேற்றுக் காலை வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றைத் தாம் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பதில் நீதிவான் கணபதிப்பிள்ளை முன்னிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதனைச் செயலிழக்க வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

நாவற்குழியில் 300 வீட்டுத் திட்டத்தில் உள்ள விகாரை மீதே நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் கைக்குண்டு ஒன்று வெடித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன் போது விகாரை முன்பாகவுள்ள மண்டபத்தில் சில இடங்களில் சிறிது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைப் பார்வையிட்டுச் சென்றனர்.பின்னர் நேற்றுக் காலையும் அங்கு பொலிஸார் சென்றபோதே வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டை மீட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பில் எவரையும் தாம் இதுவரை கைது செய்யவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவ நடைபெற்ற பகுதி இராணுவத்தினர்ன் தீவிர கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

நாவற்குழி புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு