நாவற்குழி மக்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு

யாழ். நாவற்குழிப் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர்.

ananthy-navarkkuly

நாவற்குழிப் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை சென்ற வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அங்குள்ள மக்களைச் சந்தித்ததுடன், அவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.

தாங்கள் இங்கு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன், இதுவரைகாலமும் எங்களுக்கு என்று எதுவிதமான வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் இதன்போது அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மக்களுக்கு பதிலளித்த அனந்தி சசிதரன்,

இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இங்கு வந்ததாகவும் உங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்.