நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக குடியேறினார் புத்த பெருமான்!

puththar-palalyநாவற்குழிப் பகுதியில் அத்துமீறிக் குடியேறிக் கொண்ட சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தர் சிலையின் ஆரம்ப பூஜை நிகழ்வு நேற்று முன்தினம் காலை நடைபெற்றுள்ளது.

இப்பூஜை நிகழ்வில் யாழ்.நாகவிகாரையின் புத்த பிக்குகள் உட்பட இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வந்து தங்கிருந்த சிங்களவர்கள், தாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தனர்.

ஆயினும், அவர்களிடம் தாம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், தமிழர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த ஆவனங்களும் அவர்களிடம் இல்லை.

இந்நிலையில் அவர்களை குடியேற்ற முடியாது என்று அரச அதிகாரிகள் குறியிருந்தனர். ஆயினும் சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் குறித்த சிங்களவர்கள் நாவற்குழிப் பகுதியில் அத்துமீறிக் குடியேறிக் கொண்டனர்.

அவ்வாறு குடியேறிக் கொண்ட சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் இலங்கை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிங்களவர்கள் தமக்கும் வாக்குரிமை யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தற்போது வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.