நாளை முதல் உயர்கிறது தொலைபேசிக் கட்டணங்கள்

நிலையான மற்றும் கைத்தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன.

இதன்படி தொலைபேசி அழைப்பிற்கான கட்டணங்கள் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

மொத்த அழைப்பு நேரத்தின் 25 வீதமாக இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.புதிய கட்டண அதிகரிப்பு மூலமாக 400 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் வருமானமாக ஈட்ட உத்தேசித்துள்ளது.

தொலைபேசி அழைப்பிற்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும், இணைய இணைப்பிற்கு அறவீடு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.