நாளை நிரூபித்தால் நாளை மறுதினம் பதவி விலகுவேன்! பந்துல சவால்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொருளியல் வினாத்தாளில் தவறு இடம்பெற்றுள்ளதாக நாளை நிரூபித்தால், நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் இராஜினாமா செய்வேன் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

bandula_gunawardena300px

டிவி தெரணவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தன் மீதும், அரசாங்கத்தின் மீதும் சேறு பூசுவதே, ஆசிரியர் சங்கத்தின் நோக்கம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னரே வௌியானதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியதாகவும், அது தொடர்பான வழக்கு கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பந்துல குணர்த்தன கூறினார்.

எனினும் குறித்த குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்பட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகவதாக குறிப்பிட்ட அமைச்சர், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.