நாடு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும்!!

நாடு முறையான முறையில் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் கணிசமாகக் குறைந்துள்ளனர்.

தொற்றாளர்களி்ன் எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய இறப்புகள் குறைந்த போதிலும், கோரோனா வைரஸின் ஆபத்து குறையவில்லை

நாட்டை மீண்டும் முழுமையாகத் திறக்க முடியாது. அதே நேரத்தில் படிப்படியாக மீண்டும் திறப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor