இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கணனிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை செயற்திறனாக மேற்கொள்ள முடியும். கணனிப் பயிற்சிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
பயிற்சி தேவைப்படுவோருக்கு நாடாளுமன்ற செயலகத்தின் ஊடாக தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.