நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor