நவாலியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

நவாலி தெற்கு ஜே/136 கல்லுண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வெளியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

3`1

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சிவப்பு நிற சாறி ஒன்றினால் சுற்றிக் கட்டப்பட்டும் கழுத்தில் வெட்டுக்காயங்களுடனுமே குறித்த சடவம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சலமாக மீட்கப்பட்டவர் கொடிகாமத்தை சேர்ந்த நாகராசா குகதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.