நல்லை ஆதீன முதல்வர் பசில் ராஜபக்ஷ சந்திப்பு!!

அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் ஒருபோதுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும், பௌத்தபிக்குகளும், தென்னிலங்கை இனவாதிகளுமே இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டிய கடமைதென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு உண்டென நல்லை ஆதீன முதல்வர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த பசில் ராஜபக்ஷ நேற்று நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியாரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குருமுதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எந்தப் பிரச்சனைகளும் எழவில்லை. பௌத்த தேரர்களின் எதிர்ப்பை தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளே அதனைச் சரிசெய்யவேண்டும்.

அத்துடன், தற்போதைய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி தீர்வு காணவேண்டியது உங்களின் பொறுப்பு. தற்போதைய அரச அதிபரும் உங்களின் கட்சியிலிருந்துதான் ஆட்சிக்கு வந்தவர்எனத் தெரிவித்தார்.
இவற்றின் அடிப்படையில் பேசி நீங்கள்தான் இணக்கத்தைக் காணவேண்டும். அத்துடன் தற்போது காணாமல்போனோர் விடயம்பெரும் பிரச்சனையாகவுள்ளது. அதற்கும் நீங்கள் தான் தீர்வு காணவேண்டுமென நல்லூர் ஆதீன குருமுதல்வர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்பின்னர், பசில் ராஜபக்ஷ,யாழ். ஆயர் ஜஸ்ரின்ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Related Posts