நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்

Playgroundநல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள காணியையே விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், இந்த விளையாட்டு மைதானம் சுமார் ஒரு மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விளையாட்டு மைதானத்தில், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்கள் பயன்படுத்த கூடியவகையிலும், விளையாட்டு கழகங்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும் புனரமைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.