நல்லூர் பகுதியில் 4 கடைகளில் திருட்டு

robberyநல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள 4 கடைகளில் ஒரே நேரத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர்கள் இன்று அதிகாலை கடையினை திறக்க முற்பட்டவேளை கடைகள் உடைத்து திருடப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

நான்கு கடைகளிலும் பணம் உட்பட சுமார் 2 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அத்திருட்டு சம்பவம் தொடர்பாக 4 கடை உரிமையாளர்களும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.