நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோருகிறார் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்!

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை எனது பரம்பரைச்சொத்து. அதனை மீட்டுத் தரவேண்டும் என உரிமை கோரி திடீரென எங்கிருந்தோ வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

sangiliyan palace 65dd

அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான்தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலிதோப்பு, மந்திரிமனை, அரண்மணை வாயில், சங்கிலிய மன்னனின் சிலை உள்ளிட்ட மிகச் சிலவே என்பது குறிப்பிடத்தக்கது.