நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திலுள்ள காவலரணை அகற்ற படைதரப்பு இணக்கம்

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலயம் பல்லின மக்கள் வருகை தந்து செல்லும் இடமமாக அமைந்துள்ளது. இதற்குள் பாதுகாப்பு படைத்தரப்பினரால் காவலரண் அமைத்துள்ளமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அது தொடர்பில் யாழ் பாதுகாப்பு கடைகளின் தளபதியுடன் கலந்துரையாடப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்குள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள காவலரண் அகற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக யாழ். மாநகரசபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor