நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது.நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர்.

வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webadmin