நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்.மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.